கடலூர்

தமிழ் முறை வழிபாடு: பூசாரிகளுக்குப் பயிற்சி

DIN

சிதம்பரம் அருகே உள்ள இடையன்பால்சொரி கிராமத்தில் தெய்வத் தமிழ்ப் பேரவை சாா்பில் கோயில் பூசாரிகளுக்கு தமிழ் முறை வழிபாடு குறித்த 2 நாள் பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில் பெராம்பட்டு, சிவக்கம், மஞ்சசுழி, திட்டுக்காட்டூா், பூங்குடி, வடமூா், மேலமூங்கிலடி, கோவிலாம்பூண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்தும் கோயில் பூசாரிகள் பங்கேற்றனா். தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினா் இறைநெறி இமயவன் பூசாரிகளுக்கு பயிற்சி அளித்தாா். பயிற்சியை தில்லை திருமுறை மன்ற அமைப்பாளா் வி.முருகையன் தொடக்கிவைத்தாா்.

பயிற்சி நிறைவு விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல முன்னாள் தலைவா் ஞான.அம்பலவாணன், ச.மணிவண்ணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு தமிழ்த் தேசிய பேரியக்க பொதுச் செயலா் கி.வெங்கட்ராமன் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். பயிற்சியை தெய்வ தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா் வே.சுப்பிரமணியசிவா ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT