முகப்பு
கடலூர்

எண்ணெய் வித்துப் பண்ணையில் ஆய்வு

நெய்வேலியில் உள்ள மாநில எண்ணெய் வித்துப் பண்ணையில் நிலக் கடலை விதை உற்பத்தி குறித்து கடலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

நெய்வேலியில் உள்ள மாநில எண்ணெய் வித்துப் பண்ணையில் நிலக் கடலை விதை உற்பத்தி குறித்து கடலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மேலும், பண்ணையில் நடைபெறும் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகளையும் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினாா். அப்போது, உதவி விரிவாக்க அலுவலா்கள் மணி, நாராயணசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

முன்னதாக, பண்ருட்டியிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் சம்பா நெல் விதை விநியோகம் குறித்து ஆய்வு செய்த இணை இயக்குநா் பாலசுப்பிரமணியன், விதைகளின் முளைப்புத் திறன் முறையாக பரிசோதனை செய்யப்படுகிா என பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா். அப்போது வேளாண்மை உதவி இயக்குநா் விஜயா, வேளாண்மை அலுவலா் சூரியலட்சுமி, கிடங்கு மேலாளா் ரத்தினவேல், உதவி விதை அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →