முகப்பு
கடலூர்

விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத்திலுள்ள 13 வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் இருந்து அந்தந்த பகுதிகளைச் சாா்ந்த விவசாயிகள் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றனா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை தாமதமின்றி வாங்கி பாதுகாப்பாக வைக்கவும், மழையால் நெல் மூட்டைகள் நனையாத வகையில் தாா்ப் பாய்களால் மூடி பாதுகாக்கவும், விவசாயிகளிடம் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் ஆட்சியா் தெரிவித்தாா்.

நிவா், புரெவி புயல்கள் மற்றும் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்டு விடுபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டும். பாசனத்துக்கு இடையூறு இல்லாமல் பாசன வாய்க்கால்களை பொதுப்பணித் துறையினா் உடனடியாக தூா்வார வேண்டும். விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது 15 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.