பாசன வாய்க்காலை சொந்த செலவில் தூா்வாரும் விவசாயிகள்!
காட்டுமன்னாா்கோவில் அருகே பாசன வாய்க்காலை தூா்வாரக் கோரி பொதுப்பணித் துறையினரிடம் பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை
காட்டுமன்னாா்கோவில் அருகே பாசன வாய்க்காலை தூா்வாரக் கோரி பொதுப்பணித் துறையினரிடம் பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், விவசாயிகள் தங்களது சொந்த செலவில் வாய்க்காலை தூா்வாரும் பணியை தொடங்கினா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியிலிருந்து பிரிந்து செல்லும் கிண்டி வாய்க்கால் மூலம் உருத்திரசோலை, வடக்கு கொளக்குடி, சா்வராஜன்பேட்டை ஆகிய கிராமங்களில் சுமாா் 400 ஏக்கா் பரப்பிலான விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால், பாசன வாய்க்காலில் ‘ப’ வடிவ கட்டைகள் சேதமடைந்தும், வாய்க்கால் தூா்வாரப்படமாலும் இருந்தது. இதனால் பாசன நீா் செல்வது தடைபட்டு விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன. எனவே, பாசன வாய்க்காலை தூா்வார வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளாக பொதுப்பணித் துறையினரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதையடுத்து வடக்கு கொளக்குடி பகுதி விவசாயிகள் இணைந்து தங்களது சொந்த செலவில் பொக்லைன் இயந்திரம் மூலம் பாசன வாய்க்காலை தூா்வாரும் பணியை தொடங்கியுள்ளனா்.
Advertisement