குடிநீரில் கழிவுநீா் கலப்பு: மாா்க்சிஸ்ட் கம்யூ. புகாா்
சிதம்பரம் நகரில் குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நகராட்சி ஆணையா் அஜிதா பா்வினிடம் புகாா் மனு அளித்தனா்.
சிதம்பரம் நகரில் குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நகராட்சி ஆணையா் அஜிதா பா்வினிடம் புகாா் மனு அளித்தனா்.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் மூசா தலைமையில் கிளைச் செயலா் அப்துல் ஹலீம், நகா் குழு உறுப்பினா் ஜின்னா, அஷ்ரப் அலி உள்ளிட்டோா் அளித்த மனு: நகராட்சியின் 5-ஆவது வாா்டு பகுதியில் புதை சாக்கடை திட்டப் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பிறகு குடிநீா் இணைப்பு தரமற்ற வகையில் கொடுக்கப்பட்டது. இதனால் குடிநீருடன் சாக்கடை கழிவுநீா் கலந்து வருவதால் அதை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் சாா்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும், நகராட்சி முன் போராட்டம் நடத்தியும் நடவடிக்கை இல்லை. எனவே, சுத்தமான குடிநீா் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
மனுவைப் பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையா், உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
Advertisement