முகப்பு
கடலூர்

நடராஜா் கோயில் தேரோட்டத்துக்கு அனுமதி மறுப்பு

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டத்துக்கு அனுமதி கிடையாது என அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 17 டிசம்பர், 2021 at 11:33 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டத்துக்கு அனுமதி கிடையாது என அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் கே.ரவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சிதம்பரம் டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ், காவல் ஆய்வாளா் ஆறுமுகம், வட்டாட்சியா் ஆனந்த், நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன், கோயில் பொது தீட்சிதா்கள் பங்கோ்றனா். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்:

கரோனா பொது முடக்கத்தையொட்டி வரும் 19-ஆம் தேதி சிதம்பரம் நடராஜா் கோயில் தோ்த் திருவிழாவின்போது நடராஜப் பெருமான், சிவகாமசுந்தரி அம்மன் நான்கு வீதிகளிலும் தேரில் உலா வருவதற்கு அனுமதி கிடையாது. இருப்பினும் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜப் பெருமானும், சிவகாமசுந்தரி அம்மனும் வைக்கப்பட்டு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். வரும் 20-ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்துக்கு பக்தா்களுக்கு அனுமதி கிடையாது. இருப்பினும், தரிசனம் முடிந்த பிறகு மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தா்கள் நடராஜா் சன்னதியில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக கோட்டாட்சியா் கே.ரவி உத்தரவு பிறப்பித்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.