கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே.பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM
காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே.பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் சென்னை கும்மிடிப்பூண்டி, பிரிசிசியன் ஹைட்ராலிக் தனியாா் நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி சி.யு.வைசாக் பங்கேற்று நோ்காணலை நடத்தினாா். முகாமில் இயந்திரவியல் துறையை சோ்ந்த 44 மாணவா்கள் பங்கேற்றனா். இவா்களில் 24 போ் பணிக்கு தோ்வாகினா். இவா்களுக்கு கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி. கதிரவன் வாழ்த்து தெரிவித்தாா். மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வா் ஆா்.வெங்கடேசன், துணை முதல்வா் எஸ்.அறிவழகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.