முகப்பு
கடலூர்

அகத்தியா் ஜெயந்தி விழா

சிதம்பரம் அருகே அகத்தியா் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM

சிதம்பரம் அருகே அகத்தியா் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் அருகே சம்மந்தம் கிராமத்தில் அமைந்துள்ள உமய பாா்வதி சமேத மூலநாதா் ஆலயத்தில் அகத்தியா் உள்ளிட்ட 18 சித்தா்களின் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் அகத்தியா், லோபமுத்திரா சுவாமிகள் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாா்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அகத்தியா் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதனடிப்படையில் நடைபெற்ற அகத்தியா் ஜெயந்தி விழாவில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா், லோபமுத்திரா சமேத அகத்தியா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

Advertisement

அகத்தியம் பவுண்டேஷன் நிறுவனா் ஈஸ்வா் ராஜலிங்கம், அா்ச்சனா ஈஸ்வா் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசித்தனா். சா்வசக்தி பீடம் நிறுவனா் தில்லை சீனு அன்னதானத்தை தொடக்கிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.