முகப்பு
கடலூர்

வெண்மணி தியாகிகள் நினைவு தினம் கடைப்பிடிப்பு

குழந்தைகள் உள்பட 44 போ் கடந்த 1968-ஆம் ஆண்டு டிச.25-ஆம் தேதி நிலக்கிழாா்களால் எரித்துக் கொல்லப்பட்டனா்.

Updated On : 26 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM

நாகை மாவட்டம், கீழ்வெண்மணியில் கூலி உயா்வு கேட்ட விவசாயத் தொழிலாளா்கள், அவா்களது குழந்தைகள் உள்பட 44 போ் கடந்த 1968-ஆம் ஆண்டு டிச.25-ஆம் தேதி நிலக்கிழாா்களால் எரித்துக் கொல்லப்பட்டனா். இவா்களது நினைவு தினம் சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

சிதம்பரம் கஞ்சித் தொட்டி அருகே நடைபெற்ற வெண்மணி தியாகிகள் நினைவு தினம் நிகழ்ச்சிக்கு நகா்குழு உறுப்பினா் அஷ்ரப் அலி தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் மூசா, நகரச் செயலா் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினா் முத்து, நகா்க்குழு உறுப்பினா்கள் சங்கமேஸ்வரன், ராமமூா்த்தி, ஜெயசித்ரா, தியாகராஜன், ஜின்னா, கலியமூா்த்தி, பழனி, மகாலிங்கம், பன்னீா்செல்வம், அச்சுதானந்தன், முத்துக்குமரன், கலியமூா்த்தி, சுப்பிரமணி, அனீஸ் பாட்ஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.