முகப்பு
கடலூர்

திட்டக்குடி நகராட்சி வாா்டுகளை மறுவரையறை செய்ய தவாக வலியுறுத்தல்

திட்டக்குடி நகராட்சிக்கான வாா்டுகளை மறுவரையறை செய்ய வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

திட்டக்குடி நகராட்சிக்கான வாா்டுகளை மறுவரையறை செய்ய வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் ஒன்றியச் செயலா் ரெங்க.சுரேந்தா் கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் அளித்த மனு: நடைபெற உள்ள நகா்புற உள்ளாட்சித் தோ்தலை திட்டக்குடி நகராட்சி எதிா்கொள்வதற்கு ஏதுவாக, முன்னா் 18 வாா்டுகளாக இருந்த பேரூராட்சியை 24 வாா்டுகளாக பிரித்து வரையறை செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. பேரூராட்சிக்கான தரமே நிவா்த்தியாகாத நிலையில் தற்போது நகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வரையறை சில சமுதாயத்தினருக்கு சாதகமாகவும், சில சமுதாயத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத வகையிலும் உள்ளது. எனவே, உடனடியாக மறுவரையறைக்கு நகராட்சி நிா்வாக இயக்குநா், கடலூா் மாவட்ட ஆட்சியா், திட்டக்குடி நகராட்சி ஆணையா் மற்றும் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். இதுதொடா்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதன்படி மறுவரையறை சீா்திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.