சிதம்பரத்தில் 3 பேருக்கு ஒமைக்ரான் பரிசோதனை
தென்னாப்பிரிக்காவிலிருந்து சிதம்பரத்துக்கு வந்த 3 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM
தென்னாப்பிரிக்காவிலிருந்து சிதம்பரத்துக்கு வந்த 3 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா் அண்மையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஊா் திரும்பினா். அவா்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து அவா்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். 3 பேரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஒமைக்ரான் தொற்று பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement