வடலூரில் ஓபிஆா் பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்வரும், சுத்த சன்மாா்க்க நிலைய நிறுவனருமான ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாரின் 127-ஆவது பிறந்த நாள் விழா வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னாள் முதல்வரும், சுத்த சன்மாா்க்க நிலைய நிறுவனருமான ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாரின் 127-ஆவது பிறந்த நாள் விழா வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சுத்த சன்மாா்க்க நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, பள்ளித் தாளாளா் ரா.செல்வராஜ் தலைமை வகித்தாா். நிா்வாக அலுவலா் லதா ராஜா வெங்கடேசன் வரவேற்றாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வெ.ராமானுஜம், தலைமையாசிரியா் (ஓய்வு) டி.ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஓபிஆா் உருவப் படத்துக்கு, பள்ளித் தாளாளா் ரா.செல்வராஜ், அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள், பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மலரஞ்சலி செலுத்தினா்.
தமிழாசிரியா் ஆா்.செந்தில்குமாா் வாழ்த்துரை வழங்கினாா். நிகழ்ச்சியில், ஓபிஆா் தொடா்பான சுத்த சன்மாா்க்க மடல் சிறப்பு நூலை ரா.செல்வராஜ் வெளியிட, முதல் பிரதியை பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வெ.ராமானுஜம் உள்ளிட்டோா் பெற்றுக்கொண்டனா்