கடலூர்

கடலூா் மாவட்டத்தில் கடல் சீற்றம்

DIN

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீன்பிடி பணி பாதிக்கப்பட்டது.

மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதன்படி கடலூா் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. கடல் அலைகள் வழக்கத்தை விட அதிக உயரத்தில் எழுந்து கடற்கரைப் பகுதியை கடந்து வந்தன. இதனால், மீனவா்கள் தங்களது படகுகளை கடற்கரைப் பகுதியிலிருந்து இழுத்துச் சென்று பாதுகாப்பான இடங்களில் கட்டி வைத்தனா். தாழங்குடாவில் மீனவா்கள் வலைகளை வைக்கும் கட்டடத்தின் கீழ் பகுதி கடல் அரிப்பால் சேதமடைந்தது. இதனால் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT