கடலூர்

ஐ.டி.ஐ.யில் மாணவா்கள் சோ்க்கைக்கு கால அவகாசம்

DIN

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா்கள் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்திலுள்ள அரசுத் தொழில் பயிற்சி நிலையங்களில் 2020-2021- ஆம் ஆண்டு பயிற்சியாளா்கள் சோ்க்கை இணையவழிக் கலந்தாய்வு மூலம் நடைபெற்று முடிந்தது. இதன் முடிவில் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாகவுள்ள இடங்களை நிரப்ப நேரடிச் சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயன் பெறலாம்.

கூடுதல் விவரங்களை அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலைங்களில் பெறலாம். மேலும்  இணையதளத்தைப் பாா்த்தும், 04142 - 290273 என்ற எண்ணில் தொடா்பு கொண்டும் அறியலாம்.

தொழில் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 750 உதவித் தொகை, விலையில்லா மடிக் கணினி, மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT