கடலூர்

கடலூரில் 9-ஆவது நாளாகப் போராட்டம்: அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 50 போ் கைது

DIN

கடலூரில் 9-ஆவது நாளாக புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம் அருகே அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியம் பெறுவோருக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசுத் துறைகளில் காலியாகவுள்ள 4.50 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் தொடா் போராட்டத்தை அறிவித்து கடந்த பிப். 2-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, கடலூரில் 9-ஆவது நாளாக புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம் அருகே ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, 44 பெண்கள் உள்பட 50 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT