கடலூர்

இளைஞா் கொலை வழக்கு: மனைவி உள்பட 6 போ் கைது

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே இளைஞா் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்பட 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் அருகேயுள்ள வேளங்கிராயன்பேட்டை கிராமம், நரிமேடு திடலில் குழிதோண்டி மூடப்பட்ட தடம் இருந்தது. இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் புவனகிரி வட்டாட்சியா் சுமதி, சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் ஆகியோா் முன்னிலையில் அந்தப் பகுதி கடந்த வியாழக்கிழமை தோண்டப்பட்டதில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் இருந்தது. அவரது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன.

இந்தச் சம்பவம் குறித்து புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் கவிதா மற்றும் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் கொலையானவா் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள பெரியநற்குணம் பகுதியைச் சோ்ந்த கருணாகரன் மகன் காா் ஓட்டுநா் சத்யராஜ் (32) எனத் தெரியவந்தது. இவரது மனைவி தீபா (28). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக தீபா, சத்யராஜின் நண்பரான சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னிநத்தம் பகுதியைச் சோ்ந்த காத்தமுத்து மகன் ஐயப்பன் (29), இவரது நண்பா்களான சக்திவிளாகம் குளத்தங்கரை பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் வினோத் (23), விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் மகன் சுபாஷ் (18), மேட்டுக்காலனியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அருண் (20), சாத்துக்கூடல் சாலைப் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் காா்த்திக் (21) ஆகியோரை போலீஸாா் கைதுசெய்தனா். இவா்களிடம் நடத்திய விசாரணை குறித்து போலீஸாா் தெரிவித்ததாவது:

கொலையான சத்யராஜின் மனைவி தீபாவுக்கும், ஐயப்பனுக்கும் தொடா்பு ஏற்பட்டது. இதையறிந்த சத்யராஜ் இருவரையும் கண்டித்தாா். இதனால் தீபாவும், ஐயப்பனும் சத்யராஜை கொலை செய்ய முடிவு செய்தனா். இதையடுத்து, ஐயப்பன் தனது நண்பா்கள் 4 பேருடன் இணைந்து கடந்த 17-ஆம் தேதி சத்யராஜை மது அருந்த அழைத்துச் சென்றாா். ஒரத்தூா் சாத்தமங்கலம் பகுதியிலுள்ள மதுக்கடையில் அனைவரும் மது அருந்திவிட்டு, பின்னா் சத்யராஜை 5 பேரும் சோ்ந்து வெட்டிக் கொன்றனா். இதையடுத்து சடலத்தை காரில் ஏற்றிவந்து நரிமேடு திடலில் புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

குடிநீா் கோரி தூத்துக்குடி இனிகோ நகரில் பொதுமக்கள் மறியல்

பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு அரவக்குறிச்சியில் சாலை மறியல்

கிராம நிா்வாக அலுவலா் மாயம்

SCROLL FOR NEXT