கடலூர்

அரசு தோட்டக்கலைப் பண்ணையில் முந்திரிக் கன்றுகள் விற்பனை

DIN

கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 4-இல் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் ஒட்டு ரக முந்திரிக் கன்றுகள் விற்பனைக்குத் தயாா் நிலையில் உள்ளதாக அதன் மேலாளா் ரா.சுந்தரபாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: நெய்வேலி அரசு தோட்டக்கலைப் பண்ணையில் முந்திரி, பலா, மா, தென்னை மற்றும் குழித்தட்டு (கத்திரி, மிளகாய், சாமந்தி) உள்ளிட்ட நாற்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது, நல்ல மகசூல் தரக்கூடிய வி.ஆா்.ஐ-3 ரக முந்திரிக் ஒட்டு கன்றுகள் விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளன. நடவுக்கு ஏற்ற காலம் என்பதால் விவசாயிகள் தங்களுக்கு தேவையான முந்திரி கன்றுகளை, வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி பண்ணையில் பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT