கடலூரில் மூதாட்டி அடித்துக் கொலை
கடலூரில் மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், பாதிரிக்குப்பம் முருகேசன் நகரைச் சேர்ந்தவர் பச்சையப்பன் மனைவி பச்சையம்மாள்(60). அவரும் அவரது உறவினரான ராமகிருஷ்ணன் மனைவி தாயாரம்மாள் (70) உடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று மதியம் வரை அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
காவல்துறையினர் சென்றபோது இவரும் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த இருவரையும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் பச்சையம்மாள் ஏற்கனவே இறந்திருந்தது தெரியவந்தது.
அவர்கள் இருவரும் அணிந்திருந்த தலா 2 கிராம் மூக்குத்தி, பொங்கல் பரிசு தொகுப்பாக பெறப்பட்ட ₹2500 திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.