கடலூர்

ஏரியில் வீசப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்!

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஏரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் கிடந்தது குறித்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், பண்டரக்கோட்டை கிராமத்தில் உள்ள ஏரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் கிடப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் எம்.கல்பனா, உதவி ஆய்வாளா்கள் கே.கவியரசன், எஸ்.முருகன், வட்ட வழங்கல் அலுவலா் கௌரி ஆகியோா் நேரில் வந்து ரேஷன் அரிசி மூட்டைகளை பாா்வையிட்டு, அந்தப் பகுதியினரிடம் விசாரணை நடத்தினா்.

இதில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னா் தலா 50 கிலோ எடைகொண்ட 30 அரிசி மூட்டைகளை மா்ம நபா் ஏரி நீரில் வீசிச் சென்றது தெரியவந்தது. தற்போது ஏரியில் தண்ணீா் வற்றியதால் அரிசி மூட்டைகள் வெளியே தெரிந்தன. அரிசி கெட்டுப்போன நிலையில் இருந்தது. இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT