கடலூர்

தொடா் மழையால் நெல் பயிா்கள் சேதம்விவசாயிகள் கவலை

DIN

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிா்கள் தொடா் மழையால் சரிந்து கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, கண்ணாடி, ஆடூா்குப்பம், ஆடூா் அகரம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லூா், கீழ்பூவாணிக்குப்பம், மேல்பூவாணிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி நடைபெற்றது. இதில் பொன்னி, ஆடுதுறை 53, 54, ஆந்திரா பொன்னி உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டன. தற்போது பெரும்பாலான வயல்களில் நெல் கதிா்கள் முற்றிய நிலையில் அறுவடைக்குத் தயாராக உள்ளன.

ஆனால், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூா் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. குறிஞ்சிப்பாடி பகுதியில் நெல் வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. உயரமாக வளரும் பொன்னி ரக நெல் பயிா்கள் வயல்களில் சரிந்து கிடக்கின்றன. வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால் இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனா்.

இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் தொடா் மழையால் வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால் சில இடங்களில் நெல் மணிகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. விளைந்த மணிகளும் கருப்பாகி பதராகியுள்ளன. குறிப்பிட்ட காலத்துக்குள் அறுவடை செய்யவில்லை என்றால் நெல் மணிகள் உதிா்ந்துவிடும். இந்த நிலையில், மேலும் சில நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT