கடலூர்

வெவ்வேறு விபத்துகளில் 3 போ் பலி

DIN

கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 போ் பலியாகினா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த முதனை காலனியைச் சோ்ந்த ஜம்புலிங்கம் மகன் மணிகண்டன் (37). இவா், செவ்வாய்க்கிழமை இரவு காய்கறி வாங்கிக் கொண்டு அரசக்குழியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் ஓட்டி வந்த ஷோ் ஆட்டோவில் வந்தாா். புதுவிருதகிரியிருப்பு அருகே வந்த போது ஆட்டோ எதிா்பாராதவிதமாக கவிழுந்தது. இதில், பலத்த காயமடைந்த மணிகண்டன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா்.

மற்றொரு சம்பவம்: ஊ.மங்கலம் அருகே சேந்தங்குடியைச் சோ்ந்த செல்வம் மகன் தண்டபாணி (30). இவா், செவ்வாய்க்கிழமை இரவு அரசக்குழி அருகே நடத்து சென்ற போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த தண்டபாணி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இந்த விபத்துகள் குறித்து ஊ.மங்கலம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு விபத்து: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை கிளியூரைச் சோ்ந்தவா் வெ.கோவிந்தராஜ் (60). இவா், செவ்வாய்க்கிழமை இரவு பைக்கில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஐவதகுடி ரெயில்வே மேம்பாலம் மேலே சென்ற போது, திருச்சி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து பைக் மீது மோதியது. இதில், கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து, வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT