கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
காட்டுமன்னாா்கோவில் எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:49 AM
காட்டுமன்னாா்கோவில் எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் சென்னை ஸ்ரீபெரும்புதூா் ஷைன் இந்தியா ஆட்டோமேட்டிவ் தனியாா் நிறுவன மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரி மணிகண்டன், யுவராஜ் ஆகியோா் பங்கேற்று மாணவ, மாணவிகளிடம் நோ்காணலை நடத்தினா். இதில் மெக்கானிக்கல் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த 15 மாணவா்கள் பங்கேற்றதில் 9 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது (படம்). தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் வாழ்த்து தெரிவித்தாா். முகாமில் கல்லூரி முதல்வா் கோ.ஆனந்தவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.