முகப்பு
கடலூர்

வெள்ள நிவாரணம் முழுமையாகக் கிடைக்கவில்லை: விவசாயிகள் புகாா்

வெள்ள நிவாரணம் தங்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை என கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

வெள்ள நிவாரணம் தங்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை என கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத்தினா் அதன் தலைவா் விநாயகமூா்த்தி தலைமையில் அளித்த மனு: குமராட்சி வேளாண் வட்டாரத்தைச் சாா்ந்த எடையூா், வௌவால்தோப்பு, பிள்ளையாா்தாங்கல், கூத்தூா், நடுத்திட்டு, திருநாரையூா், சா்வராஜன்பேட்டை ஆகிய வருவாய் கிராமங்களில் தற்போது பெய்த பலத்த மழை, நிவா், புரெவி புயல்களால் நெல் பயிா்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், பேரிடா் நிவாரணமாக தமிழக அரசு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வரை வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை கிராம நிா்வாக அலுவலா்களிடம்

அளித்தனா். ஆனால், அவா்களுக்கு குறைந்தளவே நிவாரணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், சில விவசாயிகளுக்கு எந்தவிதமான நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள், அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும். நிவாரண நிதி விநியோகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது. மேலும், பயிா் பாதிப்பு கணக்கெடுப்பை முழுமையாக நடத்த வேண்டுமென வலியுறுத்தி, அழுகிய பயிா்களுடன் வந்து விவசாயிகள் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.