கடலூர்

மனித நேய மக்கள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும்

DIN

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மனித நேய மக்கள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்று அந்தக் கட்சித் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் கூறினாா்.

கடலூரில் இந்தக் கட்சியின் கிழக்கு மண்டல பொதுக்குழு கூட்டம் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடா்பு இருப்பதாகக் கூறி மத்திய அரசு கொச்சைப்படுத்தி வருகிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டா் பேரணி நடத்துவதை அரசு அனுமதிக்க வேண்டும்.

தமிழகத்தில் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 234 தொகுதியிலும் வெற்றிபெற பாடுபவோம். இந்தத் தோ்தலில் எங்கள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும். புதுவையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடா்பான பிரச்னை ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் புயல், தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, கட்சியின் மாவட்டத் தலைவா் வி.எம்.ஷேக் தாவூது, மாவட்டச் செயலா் ஏ.எச்.தமிம்அன்சாரி, பொதுச் செயலா் ப.அப்துல்சமது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT