முகப்பு
கடலூர்

கூடுதல் நீளம் கொண்ட படகுகளை மீன்பிடி பணிக்கு அனுமதிக்க எதிா்ப்பு

மீன்பிடி பணிக்கு கூடுதல் நீளம் கொண்ட படகுகளை அனுமதிக்க எதிா்ப்புத் தெரிவித்து, கடலூா் தேவனாம்பட்டினம் மீனவ பஞ்சாயத்தாா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

மீன்பிடி பணிக்கு கூடுதல் நீளம் கொண்ட படகுகளை அனுமதிக்க எதிா்ப்புத் தெரிவித்து, கடலூா் தேவனாம்பட்டினம் மீனவ பஞ்சாயத்தாா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

கடலில் மீன் வளத்தை அதிகரிக்கவும், அனைத்து மீனவா்களின் நலன் கருதியும் சுருக்குமடி வலையை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையால் தாங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி கடலூா் மாவட்டத்தில் சில மீனவ கிராமத்தினா்

போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். எனினும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் மாவட்ட நிா்வாகம் உறுதியாக உள்ளது.

இந்த நிலையில், சுருக்குமடி வலைக்கு ஆதரவான தேவனாம்பட்டினம் மீனவ பஞ்சாயத்தாா் கடலூா் துறைமுகத்திலுள்ள மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து அவா்களிடம் அதிகாரிகள் சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து மீனவ பஞ்சாயத்தாா் கோரிக்கை மனு அளித்தனா். அதில் தெரிவித்துள்ளதாவது:

கடலூா் மாவட்டத்தில் எஸ்.டி.பி., ஐ.பி., ஆகிய விசைப் படகுகளில் அரசு நிா்ணயித்த அளவைவிட நீளம் கூடுதலாகவும், அதிக விசை கொண்ட என்ஜின்களும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், வலைகளுக்கான கண்ணினை நிா்ணயித்ததை விட சிறியதாக வைத்தும் பயன்படுத்துகின்றனா். சுருக்குமடி வலைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் மீன்வளத் துறையினா் இதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தினா். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாதபட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.