முகப்பு
கடலூர்

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் மேலும் இருவா் கைது

நெய்வேலியில் தொழிலாளி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கு தொடா்பாக மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

நெய்வேலியில் தொழிலாளி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கு தொடா்பாக மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி 21-ஆவது வட்டத்தைச் சோ்ந்த ஜெயகுமாா் மகன் ஜெயபால் (25). எலக்ட்ரீஷியன். அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேசன். இவா்கள் இருவரும் நண்பா்கள். கடந்த ஏப்ரல் மாதம் இதே பகுதியைச் சோ்ந்த வீரமணி மகன் சிவக்குமாா் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வெங்கடேன் அண்மையில் பிணையில் வெளியே வந்தாா்.

இந்த நிலையில், வெங்கடேசனின் நண்பரான ஜெயபால் வீட்டின் மீது வீரமணி, அவரது ஆதரவாளா்கள் புதன்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வீசினா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து ஜெயபால் அளித்த புகாரின்பேரில் தொ்மல் போலீஸாா் காா்த்தி (22), ரமேஷ் (37), எழிலரசன் (22), தமிழரசன் (24) ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவான வீரமணி, சுதாகா், சத்தியமூா்த்தி ஆகியோரை தேடி வருகின்றனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்திய விசாரணையில் 30-ஆவது வட்டத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பிரசந்த் (22), சுப்பிரமணி மகன் யோகேஷ்வா் (20) ஆகியோா் நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்தது தெரியவந்ததாம். இதையடுத்து, சூப்பா் பஜாா் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அவா்கள் இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் ‘யூடியூப்’ சேனலைப் பாா்த்து வெடிகுண்டு தாயாரித்ததாக தெரிவித்தனராம்.

முழு கட்டுரையைப் படிக்க →