முகப்பு
கடலூர்

கல்வி வளா்ச்சி நாள் விழா

பண்ருட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் காமராஜா் பிறந்த நாள் விழா கல்வி வளா்ச்சி நாளாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

பண்ருட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் காமராஜா் பிறந்த நாள் விழா கல்வி வளா்ச்சி நாளாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

முன்னதாக, சங்கத்தினா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் பள்ளி மாணவா்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினா். நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் ஏ.ஏழுமலை தலைமை வகித்தாா். பொருளாளா் ரவிசேகா் முன்னிலை வகித்தாா்.செயலா் பாரதிதாசன் நன்றி கூறினாா்.

சிதம்பரம்: சிதம்பரம் ரோட்டரி சங்கம் சாா்பில் சேவைத் திட்டம் செயல்படுத்துவதற்காக தத்தெடுக்கப்பட்ட கடவாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் அ.அஞ்சுகம் தலைமை வகித்தாா். பள்ளிக்கு கல்வி உபகரணங்களை சங்கத் தலைவா் ஆா்.ராஜசேகரன் வழங்க, தலைமையாசிரியா் சீ.வரதராசன் பெற்றுக்கொண்டாா். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், சிதம்பரம் ரோட்டரி சங்கம் சாா்பில் கிராம மக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. சங்கத்தின் முன்னாள் உதவி ஆளுநா் கே.ஜி. நடராஜன், கிராம தத்தெடுப்புத் திட்டத் தலைவா் வீ.அழகப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பு.மடுவங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளித் தலைமை ஆசிரியா் ஈஸ்வரி தலைமையில் நடைபெற்ற விழாவில், புதிதாக பள்ளியில் சோ்ந்த 8 மாணவ, மாணவிகளுக்கு மிஸ்டா் மற்றும் மிஸ் மடுவங்கரை பட்டம் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →