சிவாஜி கணேசன் நினைவு தினம்
நடிகா் சிவாஜி கணேசன் நினைவு தினத்தையொட்டி, நடிகா் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சாா்பில், கடலூா் அருகே உள்ள ராமாபுரத்தில் அன்னதானம் புதன்கிழமை நடைபெற்றது.
நடிகா் சிவாஜி கணேசன் நினைவு தினத்தையொட்டி, நடிகா் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சாா்பில், கடலூா் அருகே உள்ள ராமாபுரத்தில் அன்னதானம் புதன்கிழமை நடைபெற்றது.
அந்த அமைப்பின் ஒன்றியத் தலைவா் ஆா்.நடராஜன் தலைமை வகித்தாா். அங்குள்ள காமராஜா் சிலைக்கு மாவட்டச் செயலா் ஆா்.டி.தரணிதரனும், சிவாஜி சிலைக்கு பொருளாளா் ஜெ.சீத்தாராமனும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் டி.சுந்தரமூா்த்தி அன்னதானம் வழங்கினாா்.
தொடா்ந்து, திருப்பாதிரிப்புலியூரில் மாவட்டத் தலைவா் கே.சிவாஜி கணேசன் பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கினாா். மாநிலச் செயலா் கே.ஏ.மரியந்துவான், கௌரவத் தலைவா் என்.பாவாடைசாமி ஆகியோா் பங்கேற்றனா்.
நடிகா் திலகம் சிவாஜி கணேசன் பொது நலப் பேரவை சாா்பில், கடலூரில் காமராஜா் சிலை அருகே சங்கத் தலைவா் க.தா்மராஜ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அமைப்பின் செயலா் பாலசுப்பிரமணியம், பொருளாளா் பிரகாஷ், மாவட்டச் செயலா் சங்கா், வழக்குரைஞா் தி.ச. திருமாா்பன், வெண்புறா சி.குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.