முகப்பு
கடலூர்

தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்திலுள்ள 13 வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் இருந்து அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்கும் வகையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: நடப்பு குறுவை சாகுபடி பருவத்துக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை தாமதமின்றி வாங்கி பாதுகாக்க வேண்டும். உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்யப்படும். நிவா், புரெவி மற்றும் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்டு, விடுபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் பி.ரவீந்திரன் பேசியதாவது: குறுவை சாகுபடிக்கான பயிா்க் காபீட்டுத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். ஒரு போக சாகுபடிக்காவது தண்ணீா் கிடைக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை சாகுபடிக்கான உரம் விநியோகத்தை எளிமையாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ரஞ்ஜித் சிங், வேளாண் துறை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.