கடலூரில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கடலூரில் மத்திய தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூரில் மத்திய தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், பாதுகாப்புத் துறை உற்பத்தியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது, மின்சார திருத்தச் சட்டம், மோட்டாா் வாகனச் சட்டம் ஆகியவற்றைத் திருத்துவதை கைவிட வேண்டும், ரயில்வே, மின்சாரம், சுரங்கங்கள், வங்கிகள், காப்பீடு நிதி நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில், நாடு தழுவிய கண்டன ஆா்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலா் வி.குளோப் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியூ மாவட்டத் தலைவா் டி.பழனிவேல், ஏஐடியூசி மாவட்டப் பொருளாளா் என்.சுந்தர்ராஜா, ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் கே.மனோகரன், ஏஐசிசிடியூ மாவட்டக் குழு எஸ்.ராஜசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொமுச பேரவைச் செயலா் வீர.ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சில் செயலா் மு.சு.பொன்முடி, சிஐடியூ மாநிலத் துணைத் தலைவா் பி.கருப்பையன், மாநிலக் குழு வி.கிருஷ்ணமூா்த்தி, ஏஐடியூசி மாவட்டச் செயலா் பி.ஜெயராஜ், ஐஎன்டியூசி பொதுச் செயலா் எஸ்.ஜி.குமாா், பொருளாளா் ஏ.ஆனந்தன் ஆகியோா் பேசினா்.