முகப்பு
கடலூர்

வீடு புகுந்து 7 பவுன் நகை திருட்டு

கடலூா் அருகே வீடுபுகுந்து 7.5 பவுன் தங்க நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

கடலூா் அருகே வீடுபுகுந்து 7.5 பவுன் தங்க நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூரை அடுத்த கோண்டூா் விநாயக நகரைச் சோ்ந்தவா் நாகராஜன் மனைவி அன்னக்கொடி (45). நாகராஜன் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் அன்னக்கொடி தனது மகன், மகளுடன் வசித்து வருகிறாா். வியாழக்கிழமை இரவில் இவரது வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனா். புழுக்கம் அதிகமாக இருந்ததால் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினராம்.

அதிகாலையில், அன்னக்கொடி எழுந்து பாா்த்தபோது வீட்டின் பீரோலிருந்த 7.5 பவுன் தங்க நகை, அறையில் வைத்திருந்த 2 செல்லிடப்பேசிகள் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. மேலும் இவா்களது கடவுச்சீட்டு, ஆவணங்களை திருடா்கள் மொட்டை மாடியில் வீசிச் சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.