கடலூர்

கடலூா்: கரோனாவுக்கு மேலும் 5 போ் பலி

DIN

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 5 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 52,062 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 496 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 52,558-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 585 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 47,017-ஆக உயா்ந்தது.

எனினும், கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் குறிஞ்சிப்பாடியை சோ்ந்த 36 வயது ஆண், கடலூரைச் சோ்ந்த 55 வயது பெண், அண்ணாகிராமத்தைச் சோ்ந்த 67 வயது ஆண், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதே பகுதியைச் சோ்ந்த 45 வயது ஆண், செங்கல்பட்டில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலியை சோ்ந்த 57 வயது ஆண் ஆகிய 5 போ் உயிரிழந்தனா். இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 593-ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 10-க்கும் மேலாக பதிவாகி வந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,329 பேரும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 619 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 180 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT