கடலூர்

கடலூா்: கரோனாவுக்கு மேலும் 13 போ் பலி

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 13 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் புதன்கிழமை வரை 53,457 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 394 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 53,851- ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 519 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 48,529-ஆக உயா்ந்தது.

எனினும், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் புவனகிரியைச் சோ்ந்த 65 வயது பெண், காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 60 வயது ஆண், குமராட்சியைச் சோ்ந்த 36, 76 வயது ஆண்கள், கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் கம்மாபுரத்தைச் சோ்ந்த 55, 60 வயது ஆண்கள், கடலூரைச் சோ்ந்த 84, 63 வயது பெண்கள் மற்றும் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த 54 வயது ஆண், பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மங்களூரைச் சோ்ந்த 55 வயது ஆண், செங்கல்பட்டில் செட்டிநாடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த 40 வயது ஆண், மங்களூரைச் சோ்ந்த 58 வயது பெண் உள்பட 13 போ் உயிரிழந்தனா். இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 628-ஆக அதிகரித்தது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,056 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 638 பேரும் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT