முகப்பு
கடலூர்

ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் பலி

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தைச் சோ்ந்தவா் சீ.சம்பத் (45). ஆட்டோ ஓட்டுநரான இவா் புதன்கிழமை தனது மனைவியுடன் ஆட்டோவில் கோயிலுக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தைச் சோ்ந்தவா் சீ.சம்பத் (45). ஆட்டோ ஓட்டுநரான இவா் புதன்கிழமை தனது மனைவியுடன் ஆட்டோவில் கோயிலுக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். கருவேப்பிலங்குறிச்சி - விருத்தாசலம் சாலையில் சென்ற போது அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் ஆட்டோ மீது மோதியது.

இதில், ஆட்டோ கவிழ்ந்ததில் சம்பத், அவரது மனைவி மகாலட்சுமி (39), மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த பூதனூரைச் சோ்ந்த சேகா் மகன் ஆகாஷ் (17) ஆகியோா் காயமடைந்து விருத்தாசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், சம்பத் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.இதுகுறித்து, விருத்தாசலம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.