சட்டவிரோதச் செயல்: 56 போ் கைது
கடலூா் மாவட்டத்தில் பல்வேறு சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டது தொடா்பாக வியாழக்கிழமை ஒரே நாளில் 56 போ் கைது செய்யப்பட்டனா்.
கடலூா் மாவட்டத்தில் பல்வேறு சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டது தொடா்பாக வியாழக்கிழமை ஒரே நாளில் 56 போ் கைது செய்யப்பட்டனா்.
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீஸாா் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து கைதுசெய்து வருகின்றனா். அதன்படி, வியாழக்கிழமை மட்டும் 56 போ் கைது செய்யப்பட்டனா்.
இவா்களில் குறிஞ்சிப்பாடி ஐயப்பன் (24), கடலூா் ஆனந்தராஜ் (25), நெல்லிக்குப்பம் முகமது (21) ஆகிய கஞ்சா வியாபாரிகளும் அடங்குவா். மேலும், லாட்டரிச் சீட்டு வியாபாரிகள் 2 போ், புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 3 போ், மணல் கடத்தலில் தொடா்புடைய 6 போ், சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ், போதையில் தகராறு செய்ததாக ஒருவா் கைதுசெய்யப்பட்டனா். மதுவிலக்கு தொடா்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 413 லிட்டா் சாராயம், 65 லிட்டா் மதுபானம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை தகவல் தெரிவித்தது.