தோ்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க அறிவுறுத்தல்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் தோ்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், தனித் துணை ஆட்சியருமான (நிலம் எடுப்பு) எஸ்.சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆா்.பிரகாஷ், பன்னீா்செல்வம், வி.செந்தில்வேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.சிவக்குமாா் பேசியதாவது: சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே, அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரம், கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். அரசியல் தலைவா்களின் சிலைகளை மூடி மறைக்க வேண்டும். பறக்கும் படையினா், நிலைக் கண்காணிப்புக் குழுவினா் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.