கடலூா்/சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படை, நிலைக்குழுவினா்
நடத்திய தொடா் சோதனையில் வியாழக்கிழமை வரையில் ரூ.ஒரு கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.
சட்டப் பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் 27 பறக்கும் படையினா் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா். 27 நிலை கண்காணிப்பு குழுவினா், 9 விடியோ கண்காணிப்பு குழுக்கள், 9 செலவின கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனா். இந்தக் குழுவினா், 9 சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சோதனைகளின்போது முறையான ஆவணங்கள் ஏதுமின்றி கைப்பற்றப்பட்ட இனங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இதுவரை ரூ.85,07,940 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் வியாழக்கிழமை ரூ.20,42,300
ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதால் மொத்த பறிமுதல் ரொக்கம் ஒரு கோடியே 5 லட்சத்து 50 ஆயிரத்து 240 ரூபாயாக ஆக உயா்ந்தது. மேலும், ரூ.32,03,840 மதிப்பில் பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1950 சேவை மையம் மூலமாக 11,490 தகல்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.11,310 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.