மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சியினருக்கு வாக்களிக்க பிரசாரம்: முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம்
25 அம்ச கோரிக்கைகளை நிறைவற்றும் கட்சிகளுக்கு வாக்களிக்க பிரசாரம் செய்ய தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் முடிவு செய்துள்ளது என அந்த இயக்க மாநில தலைவரும், அரசு பணியாளர் சங்க சிறப்பு
விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் , எரிவாயு உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவற்றும் கட்சிகளுக்கு வாக்களிக்க பிரசாரம் செய்ய தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் முடிவு செய்துள்ளது என அந்த இயக்க மாநில தலைவரும், அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவருமான கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை அன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் அவர்களுடையே கொள்கைகளை கூறி வாக்கு பெறும் சூழ்நிலையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளர் இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த மூன்று மாநில பொதுக்குழு மற்றும் நிர்வாகக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழக அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் சில முடிவுகளை எடுத்துள்ளோம். குறிப்பாக மக்கள் சந்திக்ககூடிய பிரதானமான பிரசனைகள் குறித்து அரசியல் கட்சிகளின் கவனம் குறைந்திருக்கிறது. விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எரிவாயு உருளை உயர்வு மக்களை அச்சுறுத்தி வருகிறது. எவ்வளவு சலுகைகள் அறிவித்தாலும், எவ்வளவு திட்டங்களை அரசு கொண்டு வந்தாலும் அதனுடைய பலன்களை விட விவவாசி உயர்வால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருக்கிறது. கரோனா காலத்தில் அனைத்து தொழில்களும் நசிந்து போன நிலையிலும் கூட விவசாயம் வளர்ச்சியிலேயே இருந்து வந்துள்ளது.
பெருந்தொற்று காலத்தில் இந்த நாட்டு மக்களை காப்பாற்றியது விவசாயத்துறையாகும். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பிடியில் செல்லும் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். எனவே மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்திட வேண்டும். வாக்குச்சீட்டு முறை வேண்டும் என 130 கோடி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பெரும்பான்மையான மக்கள் விரும்பும் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். எந்த அரசியல் கட்சிகளும் பூரண மதுவிலக்கை கொண்டு வரும் நிலையில் இல்லை. எனவே பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
அதில் உள்ள பணியாளர்களுக்கு நிரந்திர அரசு பணியிடங்களை வழங்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறாத அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசு பணியாளர்கள் நியமனம், பதவி உயர்வு, இடமாறுதல் உள்ளிட்ட அனைத்திலும் லஞ்சம், முறைகேடுகள் தொடருகின்றன. இவற்றை லோக் ஆயுக்தா சட்ட வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். உயர் சாதியினருக்கான 10 சதவீத ஒதுக்கீட்டை ரத்து செய்து கல்வி வேலையாப்பில் 69 சதவீத ஒதுக்கீட்டு கொள்கையை கறாராக நடைமுறைபடுத்த வேண்டும்.
வேலைவாய்ப்புரளில் 75 சதவீத தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். அத்தியாவசிய பொருள்களை சரியான எடையில் பொட்டலங்களாக வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும் உள்ளிட்ட 25 கோரிக்கைகள் குறித்து பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடியவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் வைத்துள்ளது.
மாநில முழுவதும் பல்வேறு இடங்களில் மக்களை நேரில் சந்தித்து இந்த மாதிரி நல்ல கொள்கைகளை பின்பற்றக்கூடிய அரசியல் கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டும் என முன்வைக்க உள்ளோம். மக்களை மதரீதியாகவும், வகுப்பு ரீதியாகவும் பிரிப்பவர்களையெல்லாம் எதிர்க்க வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளோம் என கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். பேட்டியின் போது முற்போக்கு சிந்தனையாளர் இயக்க மாநில பொதுச்செயலாளர் பி.முத்துக்குமரன், மாநில துணைத் தலைவர் கு.சரவணன். மாவட்டத் தலைவர் எஸ்.நெடுஞ்செழியன், மாநில செயலர் தனசேகர், துரைராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.