கோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்
பண்ருட்டி வட்டம், மேலப்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீசஞ்சீவிராயா் சமேத ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பண்ருட்டி வட்டம், மேலப்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீசஞ்சீவிராயா் சமேத ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கால யாக பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. பின்னா் கும்பம் புறப்பாடு நடைபெற்று, காலை 7 மணியளவில் கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து மாலையில் திருக்கல்யாண உற்சவமும், ஸ்ரீகோதண்டராம சுவாமி அனுமந்த வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.