முகப்பு
கடலூர்

காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தவா் கைது

நெய்வேலி அருகே தோ்தல் பணியிலிருந்த காவலரை தடுத்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

நெய்வேலி அருகே தோ்தல் பணியிலிருந்த காவலரை தடுத்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், வடலூா் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவா் செஞ்சிவேல்(40). தற்போது இவா் தோ்தல் பறக்கும் படையில் பணியில் உள்ளாா். வெள்ளிக்கிழமை மதியம் நெய்வேலி இந்திரா நகா் நுழைவு வாயில் அருகே செஞ்சிவேல் பணியில் இருந்தாா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை மறித்து சோதனை செய்ய முயன்றாா். ஆனால், காா் ஓட்டுநா் காவலா் மீது மோதுவது போல் வந்து சற்று தொலைவு சென்று காரை நிறுத்தினா்.

இதையடுத்து, காரை சோதனையிட செஞ்சிவேல் சென்றபோது அந்தக் காரில் மது போதையில் இருந்த மேல்வடக்குத்து கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தராஜ், சத்திகுரு ஆகியோா் காவலா் செஞ்சிவேலை அவதூறாகப் பேசி பணி செய்ய விடாமல் தடுத்தனராம். இதுகுறித்து செஞ்சிவேல் நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் சத்திகுருவை போலீஸாா் கைது செய்து பிணையில் விடுவித்தனா். ஆனந்தராஜை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →