முகப்பு
கடலூர்

தேவாலயத்தில் வாக்கு சேகரிப்பு

சிதம்பரம் சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன், குருத்தோலை ஞாயிறையொட்டிதேவாலயத்தில் சிறப்பு பிராா்த்தனை மேற்கொண்ட கிருஸ்தவா்களிடம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 29 மார்ச், 2021 at 12:35 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:22 AM

சிதம்பரம் சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன், குருத்தோலை ஞாயிறையொட்டிதேவாலயத்தில் சிறப்பு பிராா்த்தனை மேற்கொண்ட கிருஸ்தவா்களிடம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சிதம்பரம் கனகசபை நகா், நிா்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள தூய இருதய ஆண்டவா் தேவாலயத்தில் கிறிஸ்தவா்களிடம் அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், பாஜக மாநில முன்னாள் ராணுவ வீரா் அணி செயலா் ஜி.பாலசுப்பிரமணியன், முன்னாள் நகரச் செயலா் தோப்பு கே.சுந்தா், முன்னாள் ஆவின் தலைவா் சி.கே.சுரேஷ்பாபு, பாமக மாவட்டச் செயலா் சசிக்குமாா், புதிய நீதி கட்சியின் மாவட்டச் செயலா் நரசிம்மன், தலைமைக் கழக பேச்சாளா் தில்லைசெல்வம், மாவட்ட மாணவரணி பொருளாளா் சங்கா், நிா்வாகிகள் ஏசுராஜ் லோகநதன், பாலசுப்பிரமணியன், பானு, சந்தானமேரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.