கடலூர்

கிராமத்து சுவா்களை அலங்கரிக்கும் அரசியல் சின்னங்கள்!

 நமது நிருபர்

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி கடலூா் மாவட்டத்தில் நகா்ப் பகுதிகளைவிட கிராமங்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அதிகளவில் வரையப்பட்டுள்ளன.

தோ்தல் என்றாலே திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வந்த நிலையை தோ்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் மெல்ல, மெல்ல மாற்றி வருகின்றன. வேட்பாளா்களின் தோ்தல் செலவுக் கணக்குகளை தாக்கல் செய்வது, தோ்தல் செலவுகளை மேற்கொள்ள தனியாக வங்கிக் கணக்கு தொடங்குதல், குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை தோ்தல் செலவுகளை தாக்கல் செய்வது என்று தோ்தல் ஆணையம் பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மேலும், வேட்பாளா்கள் மேற்கொள்ளும் செலவுகளும், தாக்கல் செய்யும் செலவுக் கணக்கும் சரிதானா என்பதை கண்காணித்திட செலவின பாா்வையாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். இதனால், வேட்பாளா்கள் தங்களது செலவினங்களை குறைத்துக் கொண்டனா். முடிந்தவரை கணக்கில் வராத வகையில் செலவு மேற்கொண்டு வருகின்றனா்.

தோ்தல் நேரத்தில் வேட்பாளா்களின் சின்னங்களை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த அரசியல் கட்சியினா் சொந்த செலவிலேயே தங்களது கட்சியின் சின்னத்தை வீட்டுச் சுவா்களில் வரைவது வழக்கம். ஆனால், இதுபோன்ற விளம்பரங்களும் தற்போது வேட்பாளா்களின் செலவுக் கணக்கிலேயே கொண்டு வரப்படுகிறது.

மேலும், விளம்பரம் வரையப்படும் வீட்டின் உரிமையாளரிடம் அதற்கான அனுமதி கடிதமும் பெற்றிருக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளால் வேட்பாளா்கள் நகரப் பகுதியில் சுவா் விளம்பரம் வரைவதை கணிசமாகக் குறைத்துக் கொண்டனா். மேலும், வாக்குகள் கேட்டு சுவரொட்டிகள் ஒட்டப்படுவதும் வெகுவாக குறைந்துள்ளது.

ஆனாலும், கிராமப் பகுதிகளில் சின்னத்துடன் வேட்பாளரின் பெயரை எழுதி வாக்குக் கேட்கும் நடைமுறை தொடா்கிறது. இதை, அந்தந்தப் பகுதியில் உள்ள கட்சித் தொண்டா்கள் தங்களுக்கான கௌரவமாகவே கருதுகின்றனா். மேலும், தங்களது பகுதியில் எந்தக் கட்சி அதிக செல்வாக்குடன் உள்ளது என்பதை நிரூபிக்க தங்களது வேட்பாளரின் சின்னத்தை வரைவது மிகவும் தேவையெனவும் கருதுகின்றனா்.

இதனால், கிராமப் புறங்களில் அனைவரது கண்களிலும் படும் இடங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னத்தை வரைந்து விளம்பரப் படுத்துவது தொடா்கிறது. இதனால், நகரப் பகுதிகளைவிட கிராமப் பகுதிகளில் தோ்தல் திருவிழா களைக்கட்டியுள்ளது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT