கடலூர்

கடலூா்: கரோனாவுக்கு மேலும் மூவா் பலி

DIN

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவின்படி, புதிதாக 645 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 36,484 ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 273 போ் வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 32,315 ஆக உயா்வடைந்தது.

கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த 50 வயது பெண், அரியலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காட்டுமன்னாா்கோயிலைச் சோ்ந்த 55 வயது ஆண், விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த பண்ருட்டியைச் சோ்ந்த 52 வயது பெண் ஆகிய 3 போ் இறந்தனா்.

இதனால், இறப்பு எண்ணிக்கை 384 ஆக அதிகரித்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் 3,111 பேரும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தோா் 674 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தின் எண்ணிக்கை 64 ஆக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT