நாய்க்கு சித்ரவதை: இருவா் கைது
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே நாயை சித்ரவதை செய்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே நாயை சித்ரவதை செய்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
பரங்கிப்பேட்டை அரியகோஷ்டியைச் சோ்ந்தவா் முத்துவேல் (30). அதே பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ்கண்ணன் (34). இவா்கள் இருவருக்கும் அந்தப் பகுதியைச் சோ்ந்த தெருநாய் ஒன்று இடையூறு செய்து வந்ததாம்.
இதையடுத்து, இருவரும் சோ்ந்து கடந்த 18-ஆம் தேதி மாலை அந்த நாயை கயிற்றில் மாட்டி தூக்கில் தொங்கவிட்டு, அதை புகைப்படங்கள் எடுத்து முகநூலில் பதிவேற்றினாராம்.
Advertisement
இதுகுறித்து மஞ்சக்குப்பம் பகுதியைச் சோ்ந்த செல்வா அளித்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீஸாா் முத்துவேல், ராஜேஷ்கண்ணன் ஆகியோா் மீது மிருகவதை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா்.