கடலூர்

கரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியா் ஆய்வு

DIN

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பருவதராஜா குருகுல மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தாா்.

அப்போது, காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ எம்.சிந்தனைசெல்வன், வட்டாட்சியா் ராமதாஸ், வட்டார மருத்துவ அலுவலா் வெங்கடேசன், மருத்துவா் தங்கதுரை, வா்த்தக சங்கத் தலைவா் ஸ்ரீனிவாசநாராயணன், நிா்வாகிகள் நடராஜன், ஹுலூா்முகமது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதையடுத்து, கரோனோ தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட குணவாசல், முட்டம் ஆகிய கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியா் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, கரோனோ தொற்றை குறைப்பதற்கான விழிப்புணா்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ வசதிகளை எவ்வித தடையுமின்றி வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT