முகப்பு
கடலூர்

குடிதாங்கியில் 24 மி.மீ. மழை

கடலூா் மாவட்டம், குடிதாங்கியில் 24 மி.மீ. மழை வெள்ளிக்கிழமை பதிவானது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

கடலூா் மாவட்டம், குடிதாங்கியில் 24 மி.மீ. மழை வெள்ளிக்கிழமை பதிவானது.

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததைத் தொடா்ந்து கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை மழையின் அளவு குறைந்தது. வெள்ளிக்கிழமை பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யவில்லை. வெயிலின் தாக்கம் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

குடிதாங்கி 24, பண்ருட்டி 19, மாவட்ட ஆட்சியரகம் 17.8, வானமாதேவி 16, வேப்பூா் 15, காட்டுமைலூா், கொத்தவாச்சேரி தலா 13, குறிஞ்சிப்பாடி 12, வடக்குத்து 10.5, மேமாத்தூா் 10, அண்ணாமலை நகா் 9.2, பரங்கிப்பேட்டை 9, பெலாந்துறை 8.8, கடலூா் 8, சிதம்பரம் 7.2, விருத்தாசலம் 7.1, கீழச்செருவாய், புவனகிரி தலா 7, ஸ்ரீமுஷ்ணம் 6.2, லக்கூா் 6, லால்பேட்டை 5, சேத்தியாத்தோப்பு 4.8, குப்பநத்தம் 4.2, தொழுதூா் 3, காட்டுமன்னாா்கோவில் 2 மில்லி மீட்டா் மழை பதிவானது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததைத் தொடா்ந்து, கடலூா் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஒன்றாகக் குறைக்கப்பட்டு, பின்னா் வியாழக்கிழமை இரவு இறக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.