எம்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி நினைவு பொதுக்கூட்டம்
சிததிமுக முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் மாவட்டச் செயலருமான எம்.ஆா்.கிருஷ்ணமூா்த்தியின் 32-ஆவது ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.ம்பரம்
திமுக முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் மாவட்டச் செயலருமான எம்.ஆா்.கிருஷ்ணமூா்த்தியின் 32-ஆவது ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, முட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் எம்.ஆா்.கே. பொறியல் கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் திருவிடைமருதூா் தொகுதி எம்எல்ஏ கோவி.செழியன், சிதம்பரம் நகர திமுக செயலா் கே.ஆா்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
பின்னா் செட்டி தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கோவி செழியன் எம்எல்ஏ சிறப்புரையாற்றினாா் . கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று உரையாற்றினாா்.
Advertisement
கூட்டத்தில் எம்எல்ஏக்கள் ம.சிந்தனைசெல்வன், கோ.ஐயப்பன், முன்னாள் எம்எல்ஏ மருதூா் ராமலிங்கம், திமுக பொதுக்குழு உறுப்பினா் த.ஜோம்ஸ் விஜயராகவன், ஒன்றியச் செயலா் முத்துசாமி, ராமலிங்கம், நகரச் செயலா் கணேசமூா்த்தி, விசிக மாவட்டச் செயலா் பால.அறவாழி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.