முகப்பு
கடலூர்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அரசின் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வியடைந்தவா்கள், அதற்கும் மேலான கல்வித் தகுதி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவைத் தொடா்ந்து புதுப்பித்து 30-9-2021 அன்று 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருப்போருக்கு அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் எனில் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருந்தால் போதுமானது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் எனில் 45 வயதுக்குள்ளும், இதரா் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். விருப்பமுடையோா் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நிவா்த்தி செய்து அதை வரும் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.