கடலூர்

கனமழை: சிதம்பரம் அருகே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

DIN

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் மழை வெள்ளத்தால் பகுதி மற்றும் முழுதுமாக சேதமடைந்த அனைத்து வீடுகள் உள்ளிட்ட 500 குடும்பங்களுக்கு ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ சார்பில் நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

புவனகிரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பாதிக்கப்பட்ட புவனகிரி, விருத்தாசலம், திருமுட்டம் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு (அரசு கணக்கெடுப்பின் படி) 10 கிலோ அரிசி, போர்வை, வேஷ்டி, புடவை, பாய் ஆகியவை அடங்கிய நிவாரணப் பொருட்களை கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக  செயலாளரும், புவனகிரி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.அருண்மொழிதேவன் வழங்கினார். 

நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் என்.முருகுமாறன், ஜெ பேரவை துணை செயலாளர்  எம்பிஎஸ்.சிவசுப்ரமணியன், ஒன்றியச்செயலாளர் மருதை முனுசாமி, விருத்தாசலம் நகர செயலாளர் சந்திரகுமார், கம்பாபுரம் ஒன்றியத் தலைவர் மேனகா விஜயகுமார், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் கனகசிகாமணி, ஒன்றியச் செயலாளர் பொன்னேரி முத்து, தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் அருண், கார்குடல் குறிஞ்சிசெல்வம்,சவுந்தரராஜன், மாவடட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, செல்வராஜ் உள்ளிட்ட  நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT