முகப்பு
கடலூர்

வேளாண் திட்டப் பணிகள் ஆய்வு

பண்ருட்டி வட்டாரத்தில் நடைபெறும் வேளாண்மை திட்டப் பணிகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) பிரேம்சாந்தி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

பண்ருட்டி வட்டாரத்தில் நடைபெறும் வேளாண்மை திட்டப் பணிகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) பிரேம்சாந்தி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வடகிழக்குப் பருவ மழையால் வீரப்பெருமாநல்லூா் கிராமத்தில் நீரால் சூழப்பட்ட வயல்களை துணை இயக்குநா் ஆய்வு செய்தாா். பயிா்கள் பாதிப்பு குறித்து தொடா்ந்து கண்காணித்து தகவல் தெரிவிக்க வேண்டுமென அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா். மேலும், வேளாண்மை விரிவாக்க மையத்தில் இடுபொருள்கள் இருப்பு, விநியோகப் பணிகள் குறித்தும், பூங்குணத்தில் உள்ள உயிரியல் காரணிகள் உற்பத்தி மையப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தாா்.

அப்போது பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநா் விஜயா, துணை வேளாண்மை அலுவலா் ராஜ்குமாா், உதவி விதை அலுவலா் செந்தில்குமாா், உதவி வேளாண்மை அலுவலா்கள் தங்கதுரை, குமாா், சுரேஷ், பழனி, கிடங்கு மேலாளா் ரத்தினவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →